95,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத் திட்டம் உள்ளதாக கேரள முதல்வர் தகவல்.
95,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத் திட்டம் உள்ளதாக கேரள முதல்வர் தகவல்.
கல்வியும் வேலைவாய்ப்பிலும் முன்னணியில் உள்ள மாநிலம் கேரளா. பெரும்பாலும் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பு அளிக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்தக் கொரொனா காலத்தில் மிகவும் துரிதமாகச் செயல்பட்ட அம்மாநில முதல்வர் பினராயில் விஜயனின் செயல் அனைவராலும்பாராட்டப்பட்டது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளால் பெரும் தொற்று அபாயம் அதிக எண்ணிக்கையை எட்டவில்லை.
தற்போது கொரோனா காலத்தில் வேலையின்மை,வாழ்வாதாரம் பாதிப்பு போன்ற பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவர கேரள முதல்வர் முடிவு எடுத்துள்ளார்.
அதன்படி வரும் டிசம்பருகுள் 50,000 புதியவேலைவாய்ப்புகளை ஏற்படுத்தப்படும் எனவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் இரு வாரங்களில் வெளியாகுமெனவும், கல்வித்துறை, கல்லூரி, மேல்நிலைப் பள்ளிகள் என அனைத்திலும், சுமார் 8,350 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறையில் 5000 பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் 1176 பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும்,தொழில்துறையில்23,100 மற்றும் பொது நிறுவனங்களில் 1,170 வேலை வாய்ப்புகள் நிரப்ப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் அம்மாநில இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.