அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு தி.மு.க.வில் முக்கிய பதவி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தேர்தல் பணிக்குழு இணைத் தலைவராக ராஜகண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணிக்குழுச் செயலாளர்களாக, வேலூர் ஞானசேகரன், வேலூர் விஜய், பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைக் கழகச் செய்தித்தொடர்புச் செயலாளராக பி.டி.அரசகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். தீர்மானக் குழுச் செயலாளராக ஏ.ஜி.சம்பத்தும், தீர்மானக் குழு இணைச் செயலாளராக மு.முத்துசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். தீர்மானக் குழு உறுப்பினர்களாக ஆ.நாச்சிமுத்து, வீரகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிர்வாகிகள்:
விவசாய அணி இணைச் செயலாளர்களாக எஸ்.கே.வேதரத்தினம், குறிஞ்சி என்.சிவகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாய அணி துணைச் செயலாளராக அன்னியூர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ அணி துணைத் தலைவராக டாக்டர் எ.வ.வே.கம்பனும், மருத்துவ அணி இணைச் செயலாளராக டாக்டர் லட்சுமணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர் அணிச் செயலாளராக ஆர்.பத்மநாபன், மீனவர் அணி துணைச் செயலாளராக துறைமுகம் சி.புளோரன்ஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளராக அடையாறு ஷபீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜகண்ணப்பன் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பு வகித்தபோது அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.