வீரர் ஒருவரை மேட்ச் பிக்ஸிங் செய்யச் சொல்லி ஒருவர் அணுகியதாக பிசிசிஐ தகவல்.
இந்தியாவில் நடக்க வேண்டிய ஐபிஎல் 2020 தொடர் , கொரொனாவால் இந்த ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளில் நடந்து வருகிறது.
ஒவ்வொரு மேட்சுகளும் வாழ்வா சாவா என்று பார்ப்பவர்களைப் பதைபதைக்க வைக்கிறது.
இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில், மும்பை அணி vs ஹைதராபாத் அணியும், சென்னை அணி vs பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு வீரர் மேட்ச் பிக்சிங் செய்யவதற்கான சூழல் உள்ளது என பிசிசிஐன் ஊழல் தடுப்புப் பிரிவு (ACU) தெரிவித்து,இந்த விவகாரத்தை கவனமாய்க் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.
நேரில் எந்த வீரரையும் அணுக முடியாவிட்டாலும் சில புரோக்கர்கள் ஆன்லைன் சூதாட்டம், மேட்ச் பிக்சிங் செய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் ஏற்கனவே வாட்ஸ் ஆப், டுவிட்டபோன்ற சமூகவலைதளங்களில் மூலன் ஒரு வீரரை மேட்ச் பிக்ஸிங் செய்யச் சொல்லி ஒருவர் அணுகியுள்ளதாகவும், பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.