கீட்டோ டயட்டில் உடல் எடை குறைக்க முயன்ற இளம் நடிகை மிஷ்டி சிறுநீரக செயலிழப்பினால் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நடிகைகள் பலர் திடீரென அசாத்தியமாக தங்களது உடல் எடையைக் குறைத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் அசத்தி வருகின்றனர்.
ஹிந்தி மற்றும் பெங்காலி திரைப்படங்களில் நடித்து புகழ்ப் பெற்றவர் நடிகை மிஷ்டி. இவர் சமீபக் காலத்தில் உடல் எடையை குறைப்பதற்காக கீட்டோஜெனிக் என்னும் முறையை பின்பற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுநீரகம் செயலிழந்த மிஷ்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினரும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உடல் எடை குறைப்பு முயற்சியில் நடிகை ஒருவர் உயிரிழந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.