அக்டோபர் 31 ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

கொரோன அச்சுரத்தால் காரணமாக அணைத்து மாநிலங்களுக்கும் ஓரண்டங்கு போடப்பட்டது. அதன் பின்னர் சில தளர்வுகளுடன் தேவையானவை மட்டும் திறக்கப்பட்டது. தற்போது சில இடங்களுக்கு மட்டும் தான் ஈ- பாஸ் தேவை என்றும் மற்ற இடங்களுக்கு சாதாரணமாகவே போய் வரலாம் என்ற நிலைமை தான் நிலவி வருகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் ஆறு மாதம் காலங்கள் வீட்டினுள்ளே அடைந்து கிடந்த நிலையில் இந்த தளர்வுகளை பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர்.
அதனால் சுற்றுலா தளங்கள் போன்றவை திறக்கவேண்டும் என எதிர்ப்பாக படுகிறது. அதனால் மெரினா போன்ற இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என எதிர்பார்க்க பட்ட நிலையில். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும், மெரினா கடற்கரைக்கு அனுமதி மறுக்கப்படுவதில்லை.
அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணை ஒன்றின் போது மெரினா கடற்கரைக்கு பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி எடுத்துள்ள முடிவு குறித்து வரும் அக்டோபர் 5-ஆம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டது.
இதன்படி, இந்த வழக்கில் இன்று பதிலளித்த சென்னை மாநகராட்சி அக்டோபர் 31 ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனக்கூறியுள்ளது.




