R.J. பாலாஜியின் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம் OTT தளத்தில் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கதாநாயகர்களுக்கே திரைப்படம் எனவும் கதாநாயகிகள் வெறும் மரத்தை சுற்றி டூயட் பாடுவதற்கும் கவர்ச்சிக்கு மட்டுமே என்ற தவறான இலக்கணத்தை ஒரு சில நாயகிகளே உடைத்தெறிந்தார்கள். அதில் ஒன்றிரண்டு கதாநாயாகிகளே ஜெயித்தார்கள், ஆனால் இதில் தொடர்ந்து கதாநாயகிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றிக்கண்டது என்றால் அது நயன்தாரா மட்டுமே.
மாயா, டோரா, கொலையுதிர்காலம், ஐரா, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், அறம் என அஞ்சாமல் தனித்து நின்று நடித்து வெற்றியும் கண்டார்.
அந்த வரிசையில் காமெடி நடிகர் ஆர் ஜெ பாலாஜி இயக்கி நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தீபாவளி அன்று வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.