2020ம் ஆண்டின் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு கருந்துகள் தொடர்பான ஆய்வு மேற்கொண்ட, 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் விதமாக நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. உலகின் மிக உயரிய விருதாக இந்த விருதுகள் கருதப்படுகின்றன. இதில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான பிரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்படும் நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படுவது வழக்கம்
அவ்வகையில் 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளான நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு, ஹெபடிடிஸ் சி வைரஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதற்காக 3 பேருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதைதொடர்ந்து, இன்று
2020ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3பேருக்கு அறிவிக்கப்பட்ட்டுள்ளது.
பிரிட்டனை சேர்ந்துஜா ரோஜர் பென்ரோஸ், ஜெர்மனை சேர்ந்த ரெயின்ஹார்டு கென்சல் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆன்ட்ரேஸ் கெஸ் ஆகிய 3பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
89 வயதான பென்ரோஸ், “சார்பியல் தொடர்பான பொதுவான கோட்பாடு கருந்துளைகள் உருவாக வழிவகுக்கிறது” என்பதை உறுதிபடுத்தியதற்காக கவுரவிக்கப்படுகிறார். 68 வயதான ஜென்சல் மற்றும் 55 வயதான கெஸ் ஆகியோர், கண்ணுக்கு தெரியாத மற்றும் மிகவும் கனமான ஒரு பொருள் நட்சத்திர மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களின் சுற்றுப்பாதைகளை நிர்வகிக்கிறது” என்பதை நிரூபித்து காட்டியதற்காக கவுரவிக்கப்ப்படுவதாக நோபார் பரிசு கமிட்டி குறிப்பிட்டு உள்ளது.
நாளை வேதியியலுக்கான நோபல் பரிசும், 8ம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசும், 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்படுகிறது. அதன்பின்னர் 12ம் தேதி ஆல்பிரட் நோபலின் நினைவாக ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் வழங்கும் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.