ரிலையன்ஸ் நிறுவனத்தில் அபுதாபி நிறுவனம் ரூ.1,512 கோடி முதலீடு செய்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் முகேஷ் அம்பானியின் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களில் ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும்தொகையை முதலீடு செய்தன.
இதனையடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் உலகளாவிய கவனம் பெற்றுள்ளது. அத்துடன் முகேஷ் அம்பானி கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(RIL) சில்லறை வணிக நிறுவனத்தில் அபுதாபியைச் சேர்ந்த முதலீடு ஆணையம்(ADIA) ரூ. 1,512 கோடியை முதலீடு செய்துள்ளது.
இதுகுறித்து, ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அபுதாபி முதலீட்டு ஆணையம் செய்துள்ள முதலீட்டின் மூலம் 1.2% பங்குகளை அந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது.