தேர்தலுக்கு மூன்று மாதம் முன்பே ரஜினி கட்சி தொடங்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவரது அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு, தனது ஆன்மிகம் அரசியல் என்பதை அறிவித்தார்.
இதற்குச் சில எதிர்ப்புகளும், ஆதரவுகளும் பெருகின.
ஆனால் அடுத்தடுத்த தம் அரசியல் பணிகளைச் செய்யாமல் மேற்கொண்டு படங்களில் நடித்து வருகிறார் ரஜினி.
ஆனால் ரஜினி மராட்டியர், கன்னடர் என்று சீமான், உள்ளிட்ட பலரும் கூறி வந்த நிலையில் அவர் முதல்வராவதற்கும் சிலர் எதிர்ப்புத்தெரிவித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் ரஜினி தனது தொண்டர்களை அழைத்துப் பேசியபோது, தான் முதல்வர் வேட்பாளராக நிற்கவில்லை என்றும் வேரு யாரையாவது நிறுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டார்?
அவரது கருத்துக்கு ரஜினி மன்றத்தினர் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் இதுநாள் வரை ரஜினியின் அரசியல் வருகையை எதிர்த்து வந்த சீமான், தற்போது அவர் மீதான் முரண்பாடு நீங்கியதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜினியின் கட்சித் தொடர்பான அறிவிப்பு அடுத்தாண்டு பிப்ரவரியில் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகிறது.
தற்போது அதிமுகவில் யார் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்ற பிரச்சனை எழுந்துள்ள நிலையில், ரஜினி ஆரம்பிக்க உள்ள கட்சியில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற குழப்பம் அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இருப்பினும் ரஜினி நடப்பு நிகழுகள், ரசிகர்களின் மனநிலை ஆகியவற்றியற்கேற்ப முக்கிய முடிவு எடிப்பார் என்று, சட்டமன்றத் தேர்தலுக்கு மூன்று மாதத்திற்கு முன் அவர்ர் கட்சியைத் தொடங்குவார் எனத் தெரிவித்துள்ளார்.