ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் இன்று இணையதளத்தில் பதிவிறக்கலாமென திருப்பதி கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு
ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் இன்று இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாமென்று திருப்பதி கோவில் தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பது ஏழுமலையான் கோயில் உலகிலுள்ள பணக்காரக் கரவுள் ஆவார். எப்போதும் இக்கோவிலில் பக்கதர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து வந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்கள் பொது இடங்களில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் திருப்பதி கோவிலுக்கு செல்ல பகதர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு 5 வது கட்ட சில தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் திருப்பதி தேவஸ்தான ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற்றது.
இதனையடுத்து அக்டோபர் 16 முதல் 24 ஆம் தேதிவரை நவராத்திரி பிரமோற்சவம் நடைபெறவுள்ளது.
இந்தப் பிரமோற்சவத்தில் பக்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் இந்தப் பிரமோற்சவத்தில் கலந்துகொள்ள 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் டிக்கெட் இன்று காலை 11 மணியளவில் www.tirupathibalaji.ap.gov.i என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.