தில்லியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு, வாழ்நாள் இலவச டிக்கெட்டை அறிவித்திருக்கிறது இண்டிகோ நிறுவனம்.

தில்லியில் இருந்து நேற்று இரவு பெங்களூரு நோக்கி புறப்பட்ட், ‘6 இ 122’ இண்டிகோ விமானத்தில் பயணித்தக் கர்ப்பிணிக்கு, திடீரென பிரசவவலி ஏற்பட்டது. வலி தீவிரமானதைத் தொடர்ந்து, பெங்களூருவில் தரையிறங்கும் முன்பே, கர்ப்பிணிக்கு அழகிய ஆண் குழந்தைப் பிறந்தது. குழந்தையைப் பெற்றெடுக்க விமான ஊழியர்களின் பெரிதும் உதவியுள்ளனர். மேலும், அவர்களுக்கு பெங்களூர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது.
இதனையடுத்து, இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பயணம் செய்ய இலவச டிக்கெட்டை அறிவித்துள்ளது.

தற்போது, விமான ஊழியர்கள் குழந்தையை வைத்திருக்கும் விடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும், குழந்தையை விமானத்திலேயே பாதுகாப்பாகப் பெற்றெடுக்க உதவிய இன்டிகோ விமான பணியாளர்கள் அனைவருக்கும், பாராட்டு மழை குவிந்து வருகிறது.




