கொரோனா பாதித்தவர்களுக்கு தென்படும் அறிகுறிகள் ஏராளம் காய்ச்சல், தலைவலி, தொண்டைவலி, வறட்டு இருமல், சளி, மூக்கடைப்பு, வாசனை நுகரும் தண்மையற்று போதல், வயிற்றுப்போக்கு என தினம் ஒரு அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இதில் சிலருக்கு கொரோன அறிகுறி இருக்கும் ஒருவரின் மூலம் பரவினாலும் கூட எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது.
இதற்கான காரணங்கள் இதுவரை தெளிவாக கண்டுபிடிக்கப்படவில்லை. அறிகுறி இருப்பவர்களுடன் ஒப்பிடும் போது அறிகுறி அற்றவர்களுக்கு இந்த தொற்று மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றும் விரைவில் குணமடைந்து விடுகிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் அறிகுறி இல்லாதவர்கள் மூலமே கொரோனா அதிகளவில் பரவுகிறது ஏனெனில் அறிகுறி தென்படுபவர்கள் உடனே பரிசோதனை செய்து கொள்கிறார்கள், தனிமைப்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் அறிகுறி இல்லாதவர்கள் எப்பொழுதும் போல தங்கள் அன்றாட வேலைகளில் ஈடுபடுவதால் அவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் அதிகளவில் பரவுகிறது.
இது குறித்து அமெரிக்காவில் உள்ள அரிஸோனா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், சார்ஸ் – கோவ்-2 என்று அடையாளம் காணப்படும் கரோனா வைரஸ், மனித உடலுக்குள் சென்று செல்களுக்குள் ஊடுருவி சில, பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
தற்போதைய புதிய ஆய்வில், உலகிலேயே கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பேருக்கு ஏன் அறிகுறியே இல்லை அல்லது அவர்கள் மூலமாக அதிகளவில் கரோனா தொற்று பரவுகிறது என்பது குறித்து சில குறிப்புகள் கிடைத்துள்ளன.
டக்ஸன் மருத்துவக் கல்லூரியின், மருந்தியல் துறை பேராசிரியர் மருத்துவர் ராஜேஷ் கண்ணா கூறுகையில், சிலருக்கு கரோனா பாதித்தற்கான எந்த அறிகுறியும் தெரியாது, இதற்கு, உடலுக்குள் சென்ற கரோனா தொற்று அவர்களது உடலில் வலி ஒடுக்கத்தை ஏற்படுத்துவது காரணமாக இருக்கலாம்.
அதாவது கரோனாவைப் பரப்பும் சார்ஸ்-கோவ்-2 என்ற வைரஸ், மனித உடலுக்குள் தொற்றி, உடலில் இருக்கும் வலியை உணரும் செல்களைத் தாக்கி, அவற்றை மௌனமாக்கலாம். அந்த வைரஸில் புரதத் தன்மையை சமநிலைப்படுத்தும் போது ஒரு வேளை இதற்கு தீர்வு எட்டப்படலாம்.
மேலும் நியூரோபிலின்-1 என்ற வலி உணரும் செல்களை பயன்படுத்தியும், கரோனா தொற்று உடலுக்குள் வேகமாக நுழையலாம் என்றும் சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுபோன்ற காரணங்களால்தான் கரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை என்று முதற்கட்ட ஆய்வில் கூறப்படுகிறது.