நடிகர் சுஷாந்த் வழக்கில் சிபிஐ விசாரித்து வரும் அவருடைய காதலி ரியா சக்கரவர்த்திக்கு பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.
தோனி என்னும் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அந்த திரைப்படத்தின் மூலம் ரீல் தோனி என்றே அழைக்கப்பட்டார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற இவர் அதன் பிறகு ரசிகர்களிடையே பெரிதும் ஆதரவு பெற்றார்.
கடந்த ஜூன் மாதம் இவர் தனது மும்பை வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குளாகியது. இவர் மரணத்தில் போதை மருந்து சம்மந்தப்பட்டிருக்கலாம் என்னும் சந்தேகத்தில் விசாரணை தொடங்கப்பட்டது. இந்த விசாரணையில் அவரது காதலி ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
இந்நிலையில் ரியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நடிகை ஹூமா குரேஷி அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைத்தள பதிவில் ஹூமா கூறியிருப்பதாவது: ரியா சக்கரவர்த்தியிடம் எல்லோரும் மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்தக் கொலைச் சதி பற்றிப் பேச ஆரம்பித்த நபர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும். உங்களது நோக்கம் நிறைவேற ஒரு பெண்ணின், அவரது குடும்பத்தின் வாழ்க்கையை நாசமாக்கியது குறித்து நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இவ்வாறு ஹூமா குரேஷி கூறியுள்ளார்.