தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளார்.
அதைதொடர்ந்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் விஜயகாந்த் ஓய்வு எடுத்து வருகிறார். உடன் அவரது மனைவியும், மகன்களும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்துள்ளது.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலையடுத்து, விஜயகாந்த் வீட்டில் மோப்ப நாய்கள் உதவியுடன் நடத்தப்பட்ட சோதனையில் தொலைபேசி அழைப்பு ஒரு மிரட்டல் புரளி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




