பெண் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட சில விசயங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி ரூ.103 கோடி நன்கொடை அளித்துள்ளார்

பிரதமர் மோடி நம் நாட்டிலுள்ள பெண் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட பல்வேறு விசயங்களுக்காக வேடி தனது சொந்த சேமொஇப்பு மற்றும் தனக்குக் கிடைத்த பரிசுகள் வாயிலாக 103 கோடி ரூபாயை நன்கொடையாகக் கொடுத்து உள்ளார்.
நேற்று டெல்லியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த உயர் நிலைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பல அம்சங்களை ஆய்வு செய்த பிரதமர் மோடி, தேர்தல் மற்றும் இயற்கைச் சீற்றத்திற்கு மேற்கொள்ளப்படும் நிவாரணத்தைப்போல் இந்தக் கொரொனா காலத்தில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என தெரிவித்தார்.
மேலும், பெண் குழந்தைகளுக்கு கல்வி, கங்கை நீரை சுத்தப்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தனது சொந்த சேமிப்பு மற்றும் தனக்கு வழங்கப்பட்ட பரிசுகளை ஏலத்தில் விற்று அதன்மூலம் விற்ற பணத்தை மேற்சொன்ன பிரச்சனைகளைத் தீர்க்க அவர் நன்கொடையாக வழங்கவுள்ளார். அத்துடன் மோடி இதுவாஇ ரு.103 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




