பரத் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள். கவிதாலயா தயாரிப்பு. புதிய கதைக்களம். எப்போதும் பார்க்கும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் இருந்து நல்ல முறையில் வேறுபட்டிருக்கும் ‘டைம் என்ன பாஸ்’ ஒரு பார்வை இங்கே.
முதலில் கதைக்களம்:
வெளிநாடு செல்ல வேண்டும் என்று ஆசையோடு இருக்கும் பரத். அவர் வீட்டிற்கு வரும் 4 வெவ்வேறு கலக்கட்டத்தைச் சேர்ந்த 4 பேர். அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள். அவர்களால் மறுபடியும் அவரவர் காலத்திற்குச் செல்ல முடிந்ததா என்பது கதை.
நடிகர்கள்:
இந்தத் தொடரின் மிகப்பெரிய பிளஸ் நடிகர்கள் தான். எல்லாரும் நல்ல திறமையா நடிச்சருக்காங்க. ரோபோ ஷங்கர், கருணாகரன் அவங்களோட காமெடி டைமிங் நல்லாருக்கு. சஞ்சனா சாரதி பேசற விதம் அங்கங்க சிரிப்பு வரும். பிரியா பவானி சங்கர், நடிப்புல மட்டும் இல்லாம காமெடியும் நல்ல பண்ணிருக்காங்க. பேமஸ் மேடை காமெடியன் அலெக்ஸ் இந்த படத்துல சந்தோஷம் னு ஒரு வாட்ச்மேன் வேஷத்துல வராரு.
வசனம்:
கவிதாலயா தயாரிப்புல வருது னா வசனம் நல்லாருக்கும் னு எதிர்பார்ப்போம். அத இந்தத் தொடர் பூர்த்தி பண்ணிருக்கு. இப்போல்லாம் அடிக்கடி கேக்கற ரெட்டை அர்த்த ஜோக்குகளுக்கு நடுல, இந்த தொடரோட ஜோக்ஸ் எல்லாம் தரமா இருக்கு. அவங்க உக்காந்து வேலை பாத்திருக்காங்க னு தெரியுது.
திரைக்கதை:
ஒவ்வொரு காட்சியும் முடியும் போது வரும் ஜோக்ஸ் பளிச் டைமிங். ஒவ்வொரு எபிசொட் ஒவ்வொரு சின்ன நிகழ்வை மையமா வெச்சு எடுக்கப்பட்டிருக்கு. எல்லாரும் எப்போதும் எல்லா காட்சிகளிலும் இருந்து குழப்பாமல், நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கு. ஒருவர் அவரோட வேலை எடத்துல, இன்னொருவர் பரத்தோட பிளாட்ல மற்றொருவர் ஹோட்டல்ல என்று கதைக்கு ஏற்றாற்போல காட்சிகள் அமைஞ்சிருக்கு.
இதர அம்சங்கள்:
எல்லாரோட உடைகளும் நேர்த்தியா இருக்கு. அவங்களோட கதாபாத்திரத்துக்கு ஏத்த மாதிரி தோற்றமும் இருக்கு.
பரத்தோட பிளாட், அவங்க எல்லாரும் எப்பவும் சாப்பட்ற ஜில்கோ ஹோட்டல் முதல்கொண்டு, எல்லா இடமும் அழகா காட்டிருக்காங்க.
இவங்க இந்த மாதிரி குணம் கொண்ட கதாபாத்திரம் அப்டினு தெளிவா புரிய வெச்சுட்டாங்க முதல் எபிசோடில். அதே போல தான் எப்போதும் இருக்காங்க.
இதெல்லாம் சூப்பர்:
- கதைக்களம் – கதைக்களம். கண்ணுக்கு, மனசுக்கு எல்லாமே புதுசா இருக்கு. மாமியார் கொடுமை இல்ல.யாரும் யாரோட வாழ்க்கையும் கெடணும் னு சபதம் எடுக்கல.
- நடிகர்கள் – அவர்களோட பங்கை புரிஞ்சுகிட்டு, நல்ல திறமையை வெளிப்படுத்திருக்காங்க. பரத்: அவரை தொடர் ல பாக்கறது புதுசா இருந்தாலும், கதைக்கு நல்லாவே பொருந்திருக்காரு. அவரோட தொழில் வளர்ச்சிக்கு இது நல்ல முடிவாக இருக்கும் னு நம்பலாம்.
- ஆபீஸ் காட்சிகள் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு நல்லா பண்ணிருக்காரு கருணாகரன்.
- சஞ்சனா சாரதி-பரத்தின் அம்மா இருவரும் வரும் சீன்ஸ் மனதுக்கு இதம்
- பார்த்திபனின் முன்னுரை – முதல் எபிசொட் இவரோட குரலோட தான் ஆரம்பிக்குது. அவரோட தனித்துவ ஸ்டைல் ல அந்த முன்னுரை, புத்திசாலித்தனமான ஜோக்ஸ் னு கலக்கிருக்காரு.
இன்னும் கொஞ்சம் சரி பண்ணலாமோ?
ஜோக்ஸ் – நடிகர்கள் டைமிங் நல்லாருக்கு, நெறய ஜோக்ஸ்கு சிரிப்பு வருது. என்றாலும், செம்ம காமெடி என்று சத்தம் போட்டு சிரிக்க வைக்கிறதா என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
பரத்தின் குரல்: இந்தத் தொடருக்கு வேறொருவர் குரல் கொடுத்திருக்கிறாரு. சின்ன விஷயம் தான் என்றாலும் படத்துல அவரோட குரல் கேட்டவர்களுக்கு இது மொதல்ல கொஞ்சம் புதுசா இருக்கும். அவரே குரல் குடுத்திருக்க கூடாதோ னு தோணுது.
அலெக்ஸ் அவரோட மேடை ஜோக்ஸ் ரொம்ப நல்லாருக்கும். ஒரு அரங்கத்தையே விழுந்து விழுந்து சிரிக்க வைப்பவர், இதுல அவரோட காமெடி அவ்ளோவா ஒத்து வரல.
ரொம்ப சீக்கிரமாவே அவங்க எல்லாரும் இந்த கால கட்டத்துக்கு பழகிட்டாங்களோ அப்டினு யோசிக்க வேண்டியதா இருக்கு, கொஞ்சம் நிதானமா அத காட்டிருந்தா, இன்னும் நெறய ஜோக்ஸ் அதுல அமைஞ்சிருக்கும்.