நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதை வரவேற்கிறேன் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தி ல்நடிகர் விஜய்யின் தந்தை எஸ்,ஏ.,சந்திரசேகர் பாஜகவின் இணையவுள்ளதாக வதந்திகள் வெளியானது.
இதற்குப் பதிலளித்த எஸ்.ஏ.சந்திரசேகரில் அந்தத்தகவல் உண்மையில்லை என்று விளக்க ம் கொடுத்தார்.
இதையடுத்து மீண்டும் நேற்று எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பாஜகவின் இணையவுள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், நான் உயிருடன் இருப்பது பிடிக்கவில்லை? என்று கேட்டுவிட்டு, நான் ஏற்கனவே ஒரு அமைப்பில் தான் இருக்கிறேன்…தேவைப்படும்பொழுது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படுவதை வரவேற்கிறேன் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் விஜய் ஜெயலலிதா இருக்கும்போது, தனது ஆதரவை நேரடியாகக் கொடுத்தார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றுவேன் என்று கூறியுள்ளார். அதை நான் வரவேற்கிறேன் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.




