மதுரை நாடாளுமன்ற உறுப்பினரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு. வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டாலும், மொதுமக்கள் மட்டுமல்லாமல், கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போன்றோர் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் மக்களவை உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு, இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் உள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார். அவர் விரைவில் நலம் பெற்று வர வேண்டும் எனப் பலரும் தெரிவித்துள்ளனர்.




