கேப்டன் என்ற காரணத்தால் எங்கும் ஓடி ஒளிய முடியாது என சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

சென்னை கிங்ஸ் அணியின் தொடர் தோல்வியால் அந்த அணி அடுத்த பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெரும்வாய்ப்பை நேற்றைய ஐபிஎல்-220 போட்டியில் இழந்துள்ளது.
சீனியர் வீரர்கள்தான் அணியின் தோல்விக்கு காரணமென குற்றம்சாட்டப்பட்டபோது தோனி இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமனெ கூறப்பட்டது.
இதற்கு மதிப்பளித்து நேற்று தோனி அணியில் மாற்றம் செய்து இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தால் ஆனால் சோபிக்கவில்லை.
சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து தப்பித்தது.
இதையடுத்து விளையாடிய மும்பை அணியினர் விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து 13 ஓவர்களியே வெற்றி இலக்கை அடைந்தனர்.
இந்நிலையில், இந்தத் தோல்வி குறித்து நேற்று தோனி கூலாகவே பதில் அளித்தார். அதில் , கேப்டன் என்ற பொறுப்பு உள்ள காரணத்தால் தன்னால் ஓடி ஒளிய முடியாது என்று தெரிவித்தார். மேலும் இந்தப் போட்டி நடைபெறும் களம், சுழல், வீரர்களின் மனநிலை ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றி தோல்வி அமைவதால் நிர்வாகமோ அதிகம் பதற்றம் அடையவில்லை; அடுத்தமுறை இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப்படும். இந்த தோல்வி வலிக்கிறது..இம்முறை ஓரிரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளோம்..எங்கு தவறுநடந்துள்ளது என்பது குறித்து யோசித்து அதை கலைவோம் என்று தெரிவித்தார்.
.அடுத்த முறை சென்னை கிங்ஸ் அடிபட்ட சிங்கத்தின் மூச்சுக் காத்துபோல் சிறப்பாக வெறியாகச் செயல்படலாம் என பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.




