நடிகர் கமலின் பேச்சு சினிமாவில்தான் எடுபடும் என்றுஅமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து குறைந்த காலமே ஆனாலும்கூட தன் கருத்தை ஆழமாக எடுத்து வைக்கிறார். அரசையும் விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நேற்று பீகாரில் பாஜக அரசு வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவச கொரொனா தடுப்பூசி போடப்படும் என தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் வெளியிட்டது.
இதுகுறித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும். நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர்.
எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர். இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள். ஐயா ஆட்சியாளர்களே.. தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து. அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
நடிகர் கமலின் வசனப் பேச்சு என்பது சினிமாவில் மட்டும்தான் நன்றாக இருக்கும் ஆனால் அரசியலுக்கு நன்றாக இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.




