தசரா பண்டிகையை முன்னிட்டு வடமாநிலங்களில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் ராவணனின் பொம்மை தீயிட்டுக் கொளுத்தினர்.

தீமையை வீழ்த்தி நன்மையை நிலைநாட்டிய தினமாகவும்,அதேபோல் தீமைழைந்து வந்த அசுரர்களை வீழ்த்திய தேவர்களை வணங்கிப் போற்றும் தினமாகவும் கொண்டாடப்பட்டன. அப்போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் சுமார் 30 அடி உயரமுள்ள ராவணன் உருவ பொம்மையை மக்கள் எரித்தனர்.

லக்னோவில் உள்ள ராம் லீலா மைதானத்திலும் அமைச்சர்கள்,போலீசார் முன்னிலையில் தசரா பண்டிகையொட்டி சுமார் 71 அடி உயரமுள்ள ராவணன் பொம்மையை தீயிட்டு எரித்தனர்.

குறிப்பாக இந்த ஆண்டு உலக மக்களை வாட்டி வதைக்கும் கொரோனா மற்றும் சீனாவிலிருந்து இந்நோய் பரவியதாக கூறப்படுத்தவதால் அந்நாட்டின் அதிபர் ஜின்பிங்-ஐ தீமைதருவதாக உருவகம் செயுது அவர்களின் உருவ பொம்மைகளையும் மக்கள் தீயிட்டு கொளுத்தினர்.




