2021 ஹோண்டா சிபி1000ஆர் பைக்கின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு அடுத்தடுத்து வெளியாகி வரும் புதிய வாகனங்களின் வரிசையில், ஹோண்டா நிறுவனத்தின் சிபி1000ஆர் பைக் மாடலும் இணைந்துள்ளது.
அந்த வகையில் ஹோண்டா நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ள புதிய டீசரில், சிபி1000ஆர் 2021 மாடல் பைக் நவம்பர் 10 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இன்வெர்ட்டெட் முன்புற போர்க், பின்புறம் மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தவரை முன்புறம் 310 எம்எம் ட்வின் டிஸ்க், பின்புறம் 256எம்எம் ரோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
ஷேட் அடிப்படையில் வெளியாகியுள்ள டீசர் வீடியோவில் 2021 ஹோண்டா சிபி1000ஆர் மாடலின் முகப்பு விளக்கின் அமைப்பு தற்போதைய மாடலில் உள்ளதை விட சற்றே வித்தியாசமாக இருப்பதை காண முடிகிறது. மேலும் இந்த மாடலில் அலாய் வீல்கள், புதிய டிசைன் கொண்டிருக்கிறது.
இந்த மாடலில் 999சிசி லிக்விட் கூல்டு, இன் லைன் 4 சிலிண்டர் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 143 பிஹெச்பி பவர், 104 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.