மனைவி வேலை செய்யும் அலுவலகத்தில் புகுந்து மனைவியை அரிவாளால் கொன்ற கணவன்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கால்சென்டரில் பணிபுரிந்து வந்த மனைவியை அவரது கணவன் அலுவலகம் புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில் சரஸ்வதி என்ற பொருட்கள் விநியோகம் செய்யும் கால்சென்டரில் மஞ்சு ரேகா என்பவபர் பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காட்பாடி அடுத்த விருப்பாச்சிபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சுரேகா 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், அவர் பணிபுரியும் அலுவலகத்திற்கு சென்ற தினேஷ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மஞ்சுரேகாவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினார்.
தலை, கை மற்றும் கால் பகுதியில் படுகாயமடைந்த மஞ்சுரேகாவை உடனிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தப்பியோடிய தினேஷ், பாகாயம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.