டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
டெல்லியில் காற்று மாசு ஒவ்வொரு ஆண்டும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பெருகி வரும் வாகனங்கள் வெளியிடுகிற புகை மட்டுமல்ல, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்கு பின்னர் விவசாயிகள் கழிவுகளை தீ வைத்து எரிக்கிறபோது ஏற்படுகிற புகையும் டெல்லிக்கு காற்றில் கடும் மாசு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இந்த புகையில் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு போன்ற புகைகளும் கலக்கின்றன. இதனாலே காற்று மாசு உடலுக்கு கேடாய் வந்து விளைகிறது.
காற்று தான் மக்களுக்கு உயிர் வாய்வு இல்லையா. கலப்படம் இப்போது காற்றையும் விட்டுவைக்கவில்லை. இவாறு புகை காற்று மாசுபாட்டால் காற்றில் தன்மையும், தரமும், குறைகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ‘ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற காற்று தர சுட்டெண் 377 ஆக இருந்தது. நேற்று முன்தினம் இது 343 – ஆக இருந்தது. (காற்று தர சுட்டெண் 251-350 வரையில் இருக்கிறபோது காற்றின் தரம் மோசம் என்று அர்த்தம்). காற்றின் தர சுட்டெண் 50 என்ற அளவில் இருந்தாள் தான் அதன் தரம் நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம்.
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் குறைந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த காற்று மாசால் எவவலு காலியில் எழுந்து வாக்கிங் போன்றவை செய்தாலும் சுத்தமான காற்று கிடைப்பதில்லை. மேலும் வாகனங்கள் போடுவதிலும் மிகுந்த சிரம் இருக்கின்றது. இந்த காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு டெல்லியில் அதிகளவில் மரம், செடி,கொடிகள் நடவேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.