இந்திய சினிமாவை உலக அளவிலான வியாபாரச் சந்தைப்படுத்தியவர்களின் முதன்மையான இயக்குநர் ராஜமௌலி.

இவரது பாகுபலி,1-2 ஆகிய இரண்டு படங்களுமே இந்திய எல்லைகளைத் தாண்டி உலகளவிளான வெற்றி பெற்று வசூலையும் வாரிக்குவித்தது.
இந்நிலையில், தற்போது, ராஜமௌலி தெலுங்கு சினிமாவின் தல- தளபதி என அழைக்கப்படும் ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர். ஆகிய இருவரையும் இணைத்து பிரமாண்டமான முறையில் ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
சுதந்திரப் போராட்ட வீரர்களை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருவதால் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில், ஜுனியர் என்.டி.ஆர் கொமரம் பீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்த மோசன் போஸ்டர் காட்சிகள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், கொமரம் பீமை ஒரு மதத்திற்குள் அடக்க ராஜமௌலி முயன்றதாகவும் விமர்சனங்கள் உருவாகியுள்ளது.

மேலும் பாஜக எம்பியான சோயம்பாபுரான் என்பவர், ராஜமௌலி பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மக்களின் மனதைப் புண்படுத்தும் செயல்களில் ஈடுடவேண்டாம் என எச்சரித்துள்ளார்.
ராஜமௌலி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என பலரும் எதிர்ப்பார்த்துள்ளனர்.




