வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து, தமிழகத்தில் 22 இடங்களில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு தனியார் கல்வி நிறூவனங்களும் அடங்கும்.
தமிழகத்தில் வரி ஏய்ப்பு புகாரையடுத்து, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 22 இடங்களில், சிலரது வீட்டிலும், சில தனியார் கல்வி நிறுவங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கிருஷ்ணன் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகின்றது. இதை கண்டித்து அப்பகுதி தி.மு.க.வினர், போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 22 தனியார் கல்வி நிறுவனங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.