பஜாஜ் ஆட்டோ நிறுவனம் வெறும் ரூ. 46 ஆயிரம் பட்ஜெட்டில் புதிய பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பல்வேறு அம்சங்களுடன் உயர்ரக பைக்குகள் பல விதங்களில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், நடுத்தர குடும்பங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு வாகனங்களை தயாரிப்பத்தில் பஜாஜ் நிறுவனம் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
அந்த வகையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சிடி100 கேஎஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மாடலின் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் பியூவல் காஜ் இடம்பெற்று உள்ளது. இத்துடன் ரப்பர் டேன்க் பேட்கள், பெரிய கிராப் ரெயில், நீண்ட மிரர் ஸ்டெம், ஹேன்டிள்பாரில் கிராஸ்டியூப், மேம்பட்ட சொகுசான இருக்கை, லென்ஸ் இன்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
இவைதவிர முந்தைய மாடலில் இருந்து இதில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் வழங்கப்பட்டுள்ள 102சிசி ஏர் கூல்டு என்ஜின், 7.79 பிஹெச்பி பவர், 8.34 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் விலை ரூ. 46,432, என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை காட்டிலும் ரூ. 1542 வரை அதிகம் ஆகும்
இந்த பைக் கிளாஸ் எபானி பிளாக் மற்றும் புளூ டீகல்கள், மேட் ஆலிவ் கிரீன் மற்றும் எல்லோ டீகல்கள், கிளாஸ் பிளேம் ரெட் மற்றும் பிரைட் ரெட் டீகல்கள் என மூன்று வித வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.