முகக்கவசம் பிடிக்கவில்லை என்றாலும் அதை அணிந்து தான் ஆக வேண்டும்- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்….
உலக அளவில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு மட்டும் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் தொற்று எண்ணிக்கை 60,000 கடந்து கொண்டே செல்கிறது. இதனிடையே இது தொடர்பாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க முடியாத பட்சத்தில் மக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும் என வலியுறுத்தினார். உங்களுக்கு முகக்கவசங்கள் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையே, பரவாயில்லை முகக்கவசங்கள் சில கொரோனா தடுப்பு செயல்களில் ஈடுபடுவதாக கூறினார். இதன் மூலம் நமக்கு தேவையானதை பெற்றுவிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதிபர் ட்ரம்ப முகக்கவசம் தொடர்பாக மாறி மாறி பேசி வருவது அமெரிக்கர்கள் இடையே குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.