ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் மாடல் டர்போ பெட்ரோல் வேரியண்ட் வெளியீட்டில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முந்தைய தகவல்களின் படி ரெனால்ட் டிரைபர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் இந்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்பட்டது. இதன் தொடக்க விலை ரு.5.12 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் ஹெச்ஆர்10 எனும் குறியீட்டு பெயரில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிசான் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட இந்த என்ஜின் 1.3 லிட்டர், 4-பாட் ஹெச்ஆர்13 டர்போ பெட்ரோல் யூனிட்டின் 3 சிலிண்டர் யூனிட் ஆகும்.
புதிய நிசான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யுவி மாடலிலும் வழங்கப்படும் இந்த என்ஜின் 95 பிஹெச்பி பவர் வழங்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ரெனால்ட் டிரைபர் டர்போ பெட்ரோல் மாடல் வெளியீடு தாமதமாகி உள்ளது. நடப்பாண்டில் இந்த கார் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில் புதிய வேரியண்ட் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது கைகர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை தொடர்ந்து வெளியாகும் என மோட்டார் வாகன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.