போலி கால்சென்டர் நடத்தி மோசடி செய்த மூன்று பேர் கைது செய்ப்பட்டார்கள்.
கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அமர்நாத் இவர் ஒரு தனியார் கம்பெனி மேலாளர். இவர் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையை இழந்த உள்ளார். இந்த நிலையில் வேறு வேலை தேடி ஏதாவது கிடைக்குமா என தேடி வந்துள்ளார். அப்போது கடந்த மாதம் 3ம் தேதி கோபி என்பவர் தொலைபேசியில் அமர்நாத்தை தொடர்புகொண்டு தான் ஐடி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் கமிஷன் கொடுத்தால் வேலை உறுதி செய்து தருவதாக வும் கூறியுள்ளார்.
அதனை நம்பிய அமர்நாத் ஆன்லைன் மூலம் ரூ.20 ஆயிரத்து 500 ஐ செலுத்தி உள்ளார். பின்னர் அமர்நாத்துக்கு கடந்த 14ம் தேதி வேலைக்கு உண்டான ஆர்டர் ரத்து செய்துவிட்டதாக இமெயில் என்று பெற்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அமர்நாத் தொலைபேசி மூலம் கோபியை தொடர்பு கொண்டபோது போன் சுவிட்ச் ஆப் செய்தது தெரியவந்தது.
பின்னர் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. புகாரின்பேரில் தனிப்படை போலீசார் கொளத்தூர் பிரபு, அம்பத்தூர் சாலமன், அயனாவரம் யுவராஜ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.