விராட் கோலி ரன் குவித்தாலே எங்களுக்கு பிடிக்காது என்று ஆஸ்திரேலியா டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் என்னதான் ஒரு நாள் போட்டி,டி-20 தொடர் விறுவிறுப்பாக இருந்தாலும் அன்று முதல் இன்றுவரை கிரிக்கெட் உலகத்திற்கு ராஜாவாக தொடர்ந்து காணப்படுவது டெஸ்ட் போட்டிகள் தான்.எந்த ஒரு அணியாக இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் ஸ்லெட்ஜிங் என்ற முறையில் நன்றாக விளையாடும் ஒருவரை எதிரணி வீரர்கள் ஒன்றாக இணைந்து கிண்டல் செய்து வெறுப்பேற்றி ஆட்டமிழக்க செய்வது வழக்கம்.இந்த முறையானது கிரிக்கெட் வட்டாரத்தில் ஆரோக்கியமாகவும் கருதப்படுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் போதும் ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன் இந்திய வீரர்களை இந்தமுறையில் தொடர்ந்து கிண்டல் செய்வார்.ரஹானே புஜாரா போன்ற வீரர்கள் அமைதியாக கையாண்டாலும் இந்திய கேப்டன் கோலி அதற்கு நேர்மாறாக வாய் மொழியாகவும்,ரன் எண்ணிக்கை மூலமாகவும் பதில் அளிப்பார்.
இந்தநிலையில் இது பற்றி ஆஸ்திரேலியா டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் பேசுகையில்: விராட் கோலியை பற்றி என்னிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. என்னை பொருத்தவரை மற்ற வீரர்களை போல தான் விராட் கோலியும்.ஆனால் அவருடன் நான் இதுவரை நெருங்கி பழகியது இல்லை.டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும்போது மட்டும் நேருக்கு நேர் சந்தித்து உள்ளோம்.
ஒரு ரசிகராக அவரது ஆட்டத்தை காண ஆஸ்திரேலியா அணிக்கு பிடிக்கும். ஆனால் எங்களுக்கு எதிராக அவர் அதிக ரன்கள் குவிக்கும் போது நாங்கள் அதை விரும்புவதில்லை என்று தெரிவித்துள்ளார்.