ஹோண்டா நிறுவனத்தின் 2022 சிவிக் ப்ரோடோடைப் மாடல் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிவிக் ப்ரோடோடைப் தற்போதைய சிவிக் மாடலை விட அதிநவீன தோற்றத்துடன்
சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஹோண்டா சிவிக் மாடல் கார் 11-ஆம் தலைமுறை அம்சங்களுடன் பல்வேறு பாடி டைப்களில் கிடைக்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது. 2022 சிவிக் மாடல் காரில் இடம்பெற்றுள்ள மினிமலிஸ்டிக் ஸ்டைலிங், கிரீஸ்கள் மற்றும் சிறு வளைவுகள் ஆகியவை காருக்கு
நவீன தோற்றத்தை வழங்குகின்றன. மேலும், கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், பியானோ-பிளாக் பினிஷ் செய்யப்பட்ட கிரில்,
இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், முன்புற பம்ப்பரில் ஏர் டேம் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 19 இன்ச் அலாய் வீல்கள், கருப்பு நிற ORVMகள் வழங்கப்பட்டுள்ளன. இது பிளாக்டு-அவுட் பி-பில்லருடன் மேட்ச் ஆகும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. பின்புறம் ஸ்மோக்டு எல்இடி டெயில் லைட்கள் டூயல் எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இது செடான் மற்றும் ஹேட்ச்பேக் வடிவில் கிடைக்கும். இதுதவிர டைப் ஆர் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக, ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.




