சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா இன்று உலகம் முழுவதையும் புரட்டி போட்டு கொண்டு இருக்கும் கொரோனா நோய் இந்தியாவையும் விட்டு வைக்க வில்லை
இது வரை 11 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.இதனால் உலகம் முழுவதும் ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். இருந்தாலும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அந்த அந்த நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
கொரோனா காலத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.இந்த நிலையில் அடுத்த மாதம் 15ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாட படுகிறது. சுதந்திரதினம் இந்தியா முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாட படும். இந்த வருடம் கொரோனா நோய் பரவல் காரணமாக மக்கள் கூடுவது சாத்தியமில்லை இதனால் மத்திய அரசு சில நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் படி
சுதந்திர தினத்தின் போது பெரிய அளவிற்கு மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும். கொரோனா முன்கள பணியாளர்கள் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் கவுரவிக்கும் விதமாக விழாவிற்கு அழைக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.