அரியர் ஆல் பாஸ் குறித்து தமிழக அரசு விளக்கம்.
கொரோன தொற்றால் கல்வி நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் அரியர் பரீட்சைக்காக காத்திருந்த மாணவர்கள் அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி ஒரு இன்ப அதிர்ச்சி தரலானார். அதாவது கட்டணம் செலுத்தி அரியர் எக்ஸாமுக்காக காத்திருக்கும் அனைவரும் பரீட்சை எழுதாமேலே பாஸ் என்று அறிவித்தார். இதனால் காலம் காலமாக அரியர் வைத்து திண்டாடி கொண்டிருந்த மாணவர்கள் எல்லோரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். ஆனால் இந்த முடிவு சரியற்றது, சாத்தியமற்றது, மாணவர்கள் அனைவரும் பரீட்சை எழுதி ஆகா வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது அதற்கு விதிகளை மீறி அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானிய குழு கூறிய நிலையில் தமிழக அரசு விளக்கம் தெரிவித்தது.
தமிழக அரசு கூறியது யாதெனில் அரியர் தேர்வில் ஆல் பாஸ் எனும் அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை என்று தமிழ அரசு உச்சநீதி மன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது எனவும் தெரிவித்தது. பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளை மீறி அரியர் தேர்வு விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அரியர் தேர்வுகளை ரத்து செய்யும் அதிகாரம் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளது எனவும் தமிழக அரசு தன் தரப்பு வாதத்தை உச்சநீதி மன்றத்தில் பதிவு செய்தது.