நிவர் புயல் தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய மந்திரிகளுடன் ஆலோசனை.

நிவர் புயல் தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலசோனை கூட்டத்தில் விவரிக்கப்பட்டவை யாதெனில்: தற்போது ஏழு மாவட்டங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்ட நிலையில் ரயில் சேவை மற்றும் நிர்த்தப்படாமல் முக்கியமான வேலைகளுக்காக செல்லும் பயணிகளுக்கு மட்டும் சேவை தொடர்ந்து வருகின்றது. இதனை தொடர்ந்து புறநகர் ரயில் சேவைகளை நிறுத்தலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடந்துவருகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்போது பொதுவாகவே மூடப்பட்டுள்ள நிலையில் அரசு அலுவலர்களுக்கு விடுமுறை அளிக்கலாமா என்பது குறித்தும் மழையினாலும், வெள்ளத்தினாலும் பெரும்பாலும் பாதிக்கப்படும் இடங்களான தாழாவான பகுதிகளில் உள்ள கட்டுப்பாடு சேவைகள் பற்றியும் அதன் அருகில் உள்ள நிவாரண முகாம்கள் எப்படி இருக்கின்றது? அங்கு மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கைகள் செய்யப்பட்டு விட்டதா? அங்கு தேவையான அளவு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனரா என்பது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றது.
மேலும் மதியம் மூன்று மணி அளவில் அங்கங்கே உள்ள கட்டுப்பாட்டு அறைகளுக்கு முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிடுகிறார். இந்த கூட்டத்தின் வாயிலாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படவும் வாய்ப்புகள் உள்ளது.




