அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, நாளை மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலில் நாளை மாலை ஆறு மணிக்கு மாக தீபம் ஏற்றப்படவுள்ளது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த திருநாளானது இந்த வருடம் கடந்த இருபதாம் தேதி கோடி ஏற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழாவான பரணி தீபம் மற்றும் மாக தீபமானது நாளை நடைபெற உள்ளது.
நாளை அதிகாலை நான்கு மணிக்கு, அண்ணாமலையார் திருக்கோவில் அண்ணாமலையாருக்கு முன்பாக திரு பரணி தீபம் ஏற்றப்படும் அதனை தொடர்ந்து தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாக தீப ஏற்றம், கோவிலுக்கு பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது ஏற்றப்படும்.
மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரையை ஒவ்வொரு ஆண்டும் சுத்தம் செய்யப்பட்டு தீபத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்வது வழக்கம். அதன்படி இன்று அண்ணாமலையார் கோவிலில் காலை நான்கு மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த கொப்பரை மலையில் மீது கொண்டு செல்லப்பட்டது.