இரண்டாவது ஒரு நாள் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகினார்.
ஆஸ்திரேலியா:
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 389 ரன்கள் அடித்து அசத்தியது.390 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் மட்டுமே அடித்து 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.2-0 என்ற கணக்கில் தொடரையும் இழந்தது.
இந்திய அணி இலக்கை அடைய ஆரம்பத்தில் களமிறங்கியபோது தொடக்கவீரர் தவான் 6 வது ஓவரில் மிட் ஆஃப் திசையில் அடித்த பந்தை டேவிட் வார்னர் டைவ் அடித்து பிடிக்க முயன்றார். அப்போது விழுந்த வேகத்தில் அவரது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார்.அதன்பிறகு எஞ்சிய போட்டிகளில் வார்னர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில் காயத்தின் தன்மை வீரியமாக இருப்பதால் மீதம் உள்ள ஒரு நாள்,டி-20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து அவர் விலகுவதாக ஆஸ்திரேலியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.