வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது,இந்த புரவி புயலானது சரியாக திருகோணமலையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இந்த புயல் சின்னமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து 24 மணி நேரத்தில் புயலாக மேலும் வலுவடையும் எனவும் ,நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் இலங்கை பகுதியில் புரவி புயல் கரையை கடக்க அதிக வாய்ப்பு உள்ளது.மேலும் இந்த புரவி புயல் கரையை கடக்கும் போது தென் தமிழகம் மற்றும் கேரளா பகுதிகளில் அதீத கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.