உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 அன்று நடைபெறுகிறது
உலக எய்ட்ஸ் தினம் முதன்முதலில் 1988 இல் அனுசரிக்கப்பட்டது. இது எச்.ஐ.வி உடன் வாழும் மக்களுக்கு ஆதரவைக் காண்பிப்பதற்கும், எய்ட்ஸ் தொடர்பான நோயால் இறந்தவர்களை நினைவுகூருவதற்கும், எச்.ஐ.விக்கு எதிரான போராட்டத்தில் உலக மக்கள் ஒன்றுபட இது ஒரு வாய்ப்பு.1988 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலக எய்ட்ஸ் தினம் உலகளாவிய சுகாதார தினமாக இருந்தது
எச்.ஐ.வி. தடுப்பது எப்படி
ஆணுறை உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களுடன் பாதுகாப்பான உடலுறவு
போதைபொருள் பயன்படுத்துவதை தவிர்த்தல்
மற்றவர் பயன்படுத்திய ஊசி, சிரஞ்சுகள் தவிர்த்தல்
இவற்றினை தடுப்பதன் மூலம் எச்.ஐ.வி ஏற்படுவதை தடுக்கலாம்
எயிட்சுக்கு தடுப்பூசி உண்டா?
எச்.ஐ.வி வைரஸை தடுக்க தடுப்பூசி ஏதும் இல்லை, அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகிறது
2020 அனுசரிப்புக்கான கருப்பொருள் “எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருதல்
உலக எய்ட்ஸ் நாளில் நான் என்ன செய்ய முடியும்?
உலக எய்ட்ஸ் தினம் என்பது உலகளவில் எச்.ஐ.வி உடன் வாழும் மில்லியன் கணக்கான மக்களுடன் ஒற்றுமையைக் காட்டும் வாய்ப்பாகும். பெரும்பாலான மக்கள் எச்.ஐ.வி விழிப்புணர்வு சிவப்பு நாடாவை அணிந்து இதைச் செய்கிறார்கள்