வாட்ஸப்பில் ஆன்லைன்னில் இருக்கிறோம் என்பதை தெரியப்படுத்தாமல் இருக்க என்ன செயலி உபயோகப்படுத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
இன்று வாட்ஸப் பலரது மொபைல்களிலும் தவிர்க்க முடியாத ஒரு செயலியாக இருக்கிறது. இதில் பணப்பரிவர்த்தனை முதற் கொண்டு பல புதிய அம்சங்கள் அறிமுக படுத்தப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமல்லாது பல முக்கிய அம்சங்களும் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வாட்ஸப்பில் நம்முடைய லாஸ்ட் சீனை செட்டிங்கில் மறைத்து கொள்ள முடியும். ஆனால், நாம் ஆன்லைனில் இருப்பதை மறைக்க முடியாது.
இதற்கான எந்த வசதியும் இன்னும் வாட்ஸப்பில் அறிமுகப்படுத்தாத நிலையில், வேறு செயலிகளை இதற்கென பதிவிறக்குவதன் மூலம் இதனை நாம் பயன்படுத்தலாம். இதற்கு உபயோகப்படுத்தப்படும் செயலி தான் Whatsapp Bubble for Chat.
இதை நாம் தரவிறக்கி வைத்து உபயோகப்படுத்துவன் மூலம், வாட்ஸப்பில் நாம் ஆன்லைனில் இருந்தாலும் அதனை மற்றவர்களுக்கு காண்பிக்காது. மேலும் நமது லாஸ்ட் சீனையும் இதில் மறைத்து கொள்ளலாம்.
READ ALSO- பல சர்ச்சைகளுக்கு பின்பு மீண்டும் ட்விட்டரில் ப்ளூடிக்!
இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் நாம் எவ்வளவு மணி நேரம் ஆன்லைனில் இருந்தாலும் அதை இந்த செயலி மூலம் மறைத்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.