நிசான் நிறுவனத்தின் புதிய மாடலான மேக்னைட் காருக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது.

நிசான் இந்தியா நிறுவனம் தனது புதிய மாடலான மேக்னைட் காரை, நாளை (டிச.2) இந்தியாவில் வெளியிட உள்ளது. அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த வெளியீடு நிகழ உள்ள நிலையில், மேக்னைட் காருக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. அதனுடன், எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.அதேசமயம், இந்த என்ஜினின் செயல்திறன் விவரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
காரின் உட்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், என்ஜின் ஸ்டார்ட் – ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிப்புறம் எல்இடி முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறன.
மேலே குறிப்பிடப்பட்ட சிறப்பு அம்சங்களுடன் இந்தியாவில் நிசான் மேக்னைட் மாடல் மொத்தம் எட்டு நிறங்களில் கிடைக்க உள்ளது. இந்நிலையில், புதிய நிசான் மேக்னைட் காரின் முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.




