மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள சுரங்க பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலாண்மை : மத்திய அரசு
நிர்வாகம் : நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC)
காலிப் பணியிடம் : 40
பணி விவரம் : சுரங்க பொறியாளர்
கல்வித் தகுதி : சுரங்கம் சார்ந்த துறையில் டிப்ளமோ, பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.24,000/மாதம்
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக www.ntpccareers.net என்ற இணையதளம் மூலம் 12.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பணி குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ntpccareers.net என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை காணவும்




