டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் வாகன விற்பனையை ஊக்குவிக்க, அரைவ் எனப்படும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வாகன விற்பனையை ஆன்லைன் தளத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இதன் அடிப்படையிலேயே பல நிறுவனங்களும் தங்களுக்கான பிரத்யேக வலைதளம், செயலி உள்ளிட்டவைகளை அறிமுகம் செய்து வருகின்றன.
அந்த வகையில் டிவிஎஸ் மோட்டார் கம்பெணி நிறுவனம் அரைவ் எனப்படும், புதிய ஸ்மார்ட்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் வாகனங்களை முன்பதிவு செய்யும் வழிமுறையை முற்றிலும் மாற்றி அமைக்கும் வசதியை வழங்குகிறது.
இந்த செயலியில் – ‘Place to explore’, ‘Scan a real bike’ ஆகிய இரண்டு மோட்களும் ஆக்மென்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. ‘Place to explore’ மோட் டிவிஎஸ் வாகனத்தை 360 டிகிரி கோணத்தில் காண்பிக்கிறது.
இத்துடன் ‘Scan a real bile’ மோட் மோட்டார்சைக்கிள் ஒன்றை முழுமையாக ஸ்கேன் செய்து அதன் அம்சங்கள் மிக துல்லியமாக அறிந்து கொள்ள உதவும். இறுதியாக இதில் இடம்பெற்று உள்ள ‘3D mode’ ஏஆர் தொழில்நுட்பத்திற்கான வசதி இல்லாத ஸ்மார்ட்போன்களுக்காக உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.