Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

ஆ.ராசாவை ஸ்டாலின் நீக்க வேண்டும்: ஜெயலலிதா முன்னாள் வழக்கறிஞர் ஜோதி பேட்டி!

December 7, 2020

ஜெயலலிதாவை குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்ததாக கூறிய ஆ. ராசாவுக்கு வழக்கறிஞர் ஜோதி பதிலளித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் தொகையைப் போல, 2 ஜியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது திமுக தான் என்று அண்மையில் குற்றம்சாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணியிலிருந்த காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு 2ஜி அலைக்கற்றை ஊழல் நிகழ்ந்ததாகவும் குற்றம்சாட்டினார்.  இவ்வழக்கில் ஸ்டாலினும் விரைவில் சிக்குவார் என கூறினார்.

தமிழர்களின் வாக்குகளை நீங்கள் திருட முடியாது!

என்னுடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது – பிரேமலதா

அதிமுகவிற்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது – ஆர்.எஸ்.பாரதி

இதற்கு பதில் அளித்த திமுக துணைப் பொதுச் செயலாளர்  ஆ.ராசா, முதல்வருடன் கோட்டையில் நேரடியாக விவாதிக்க தயார் என அறிவித்தார்.
அத்துடன்  கோடி கோடியாக கொள்ளையடித்து அரசியலமைப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி படுகொலை செய்த மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி ஜெயலலிதா என்றும் விமர்சித்தார்.

இந்த நிலையில் ஆ.ராசாவின் குற்றச்சாட்டுக்களுக்கு ஜெயலலிதாவின் முன்னாள் வழக்கறிஞர் ஜோதி சென்னையில் விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுதலையாகிவிட்டார். உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் வழக்கு வருவதற்குள் இறந்துவிட்டார். ஒருவர் இறந்த பிறகு அவருக்கு எதிராக  வழக்கு நடத்தக் கூடாது என்பது சட்டம் என்று குறிப்பிட்ட வழக்கறிஞர் ஜோதி,
“நிலைமை இப்படி இருக்க  உச்ச நீதிமன்றம் எவ்வாறு ஜெயலலிதா அரசியலமைப்பு சட்டத்தை மீறிய கொள்ளைக்காரி என்று சொல்லியிருக்க முடியும். அவ்வாறு எதுவும் உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை.
பிரிவு 394ன் கீழ் ஜெயலலிதா குற்றமற்றவர். ஆ.ராசா 2ஜி வழக்கில் இருந்து விடுதலையானது போலவே ஜெயலலிதாவும் வழக்கில் இருந்து விடுதலையாகி விட்டார்” என்று விளக்கம் அளித்தார்.

ஆ.ராசா பேசிய விவகாரம் தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்த அவர், ” ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்திருந்தால் வழக்கில் இருந்து அவர் பெயர் விடுவிக்கப்பட்டிருக்கும். சசிகலா தரப்பு ஏன் இறப்புச் சான்றிதழை தாக்கல் செய்யவில்லை” எனக் கேள்வி எழுப்பினார்.

சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து ஆ.ராசாவுடன் விவாதிக்க நான் தயார் எனவும் சவால் விடுத்ததோடு, அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் வரத் தயார் எனவும் கூறினார். முதல்வரை அவதூறாக பேசிய ஆ.ராசாவை ஸ்டாலின் நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் ஜோதி. இவர் டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்காக ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

நாளை நடக்கும் விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலுங்கானா ஆதரவு அளிக்கும் :சந்திரசேகர ராவ்

Next Post

‘KGF2’ டீசர் எப்போது?

Next Post

‘KGF2’ டீசர் எப்போது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version