இந்தியாவில் சியோமி நிறுவனம் தனது 4 QLED ஸ்மார்ட் டிவியினை இந்த மாதம் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
சியோமி நிறுவனம் தனது Mi 4 QLED டிவி 4k மாடலினை இந்தியாவில் இந்த மாதம் 16ம் தேதி அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதன் ஆன்லைன் விற்பனை எம்ஐ தளங்களிலும் ஃபிளிப்கார்ட் தளத்திலும் விற்பனையாக உள்ளது. இதேபோல கடந்த வருடம் நவம்பரில் சியோமி நிறுவனம் எம்ஐ டிவி 5 ப்ரோ சீரிசில் பல டிவி மாடல்களை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
READ ALSO- Oppo F17 Pro மீது அதிரடி விலை குறைப்பு!
அதன் படி, இந்த வருடம் அறிமுகமாகும் மாடல்களுக்கான டீசரை வெளியிட்டுள்ளது நிறுவனம். அதில் டாட் ஸ்கிரீன், டால்பின் விஷன், டால்பி ஆடியோ, HDMI 2.1 கனெக்டிவிட்டி போன்ற வசதிகள் இருப்பது ஹைலைட் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.