இந்தியாவுக்கான புதிய இலங்கைத் தூதுவராக மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை:
இலங்கையின் எதிர்காலத்திற்கும், அமைதிக்கும் , அதன் அருகில் இருக்கும் வல்லரசு நாடான இந்தியாவுடனான உறவு மிக அவசியம் என்பதை இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே உணர்ந்துள்ளார். அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு நியமனங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கான புதிய இலங்கைத் தூதுவராக மிலிந்த மொரகொட நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள மிலிந்த மொரகொட இலங்கையில் மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.இவரது நியமனம் இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசுக்கும் நல்ல உறவுப் பாலமாக அமையும் என்று அரசில் வட்டாரத்தில் நம்பப்படுகிறது.