உலகில் முதல் முறையாக பிஎஸ்என்எல் அசத்தல் சேவையை அதன் பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகில் முதல் முறையாக செயற்கை கோள் சார்ந்த இணைய சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் ஸ்கைலோடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் வழங்க இருக்கிறது.
முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த சேவையை கொண்டு இந்தியாவில் கடல் பகுதிகள் மற்றும் வடகிழக்கு எல்லை பகுதிகள் என அனைத்து பகுதிகளுக்கும் ஒரு சீரான இணைய சேவையை எந்த தடையும் இன்றி வழங்க முடியும்.
READ MORE- வாட்ஸப் மற்றும் இன்ஸ்டாவை விற்க போகிறதா ஃபேஸ்புக்?
தற்போது இந்த சேவை சோதனை முயற்சியாக இருந்து வருகிறது. மீன்பிடி படகுகள், ரயில்வே, கனரக வாகனங்கள் போன்றவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தரமான இந்திய புதிய தொழில்நுட்ப சேவையை பயனாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்க முடிவு செய்துள்ளதாக ஸ்கைலோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாகியிருக்கும் இந்த சேவை விரைவில் பயனாளர்களுக்கும் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.




