2001 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தாக்குதலில் பலியான வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
புதுடெல்லி:
டெல்லியில் டிசம்பர் 13 ம் தேதி,2001 ம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்திற்குள் பயங்கரவாதிகள் தீடிரென புகுந்து தாக்குதல் நடத்தினர்.அப்பொழுது பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்ததில் 5 பேர் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.இந்த தீடிர் தாக்குதலில் பாதுகாப்பு படையினரை சேர்ந்த 9 பேர் வீர மரணம் அடைத்தனர்.மேலும் 15 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more – தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்க,திருத்த சிறப்பு முகாம்
இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றோடு 19 ம் ஆண்டுகள் நிறைவு அடைந்ததை தொடர்ந்து மத்திய அரசின் சார்பாக நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு அப்பொழுது பிரதமர் மோடி வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு அஞ்சலி செலுத்தினார்.அதன்பிறகு இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 2001 ல் நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட கோழைத்தமான தாக்குதலை இந்திய நாடு ஒருபோதும் மறக்காது என்று தெரிவித்துள்ளார்.