கொரோனா காலத்தில் பணியாறறிய 4 ஆயிரம் செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தற்காலிக செவிலியர்கள்
கொரோனா தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக பணியாற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், அவர்களை பணிநியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

பணிநிரந்தரம்
கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அரசு செவிலியர்கள் 4000 பேருக்குத் தற்காலிகப் பணிக்காலம் நிறைவடைய உள்ளது.கொரோனா தொற்று அபாயம் முழுமையாக நீங்காத நிலையில், செவிலியர்களின் சேவை மருத்துவத் துறைக்கும் மக்களுக்கும் தேவை என்பதால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




