ஐபோன் நிறுவனத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் தொடர்பாக 7,000 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்யப்பட்டு 160 பேரை கைது செய்துள்ளனர்.

கோலார் :
கர்நாடக மாநிலம் கோலாரில் விஸ்ட்ரான் நிறுவனம் ஐபோன் உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது.மேலும் இந்த நிறுவனம் லெனோவா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களையும் தயாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில்,கடத்த சில மாதங்களாகவே இந்த நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் பணியாளர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும்,அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.இதனை தொடர்ந்து விஸ்ட்ரான் நிறுவனத்துடன் தொழிலாளர் அமைப்பினர் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஆத்திரம் அடைந்த பணியாளர்கள் கடந்த 12 ம் தேதி சனிக்கிழமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.மேலும் பணியாளர்கள் அலுவலகத்தை கற்களை வீசியும்,கட்டைகளை கொண்டும் உடைத்து எரிந்து வாகனத்திற்கு தீ வைத்தனர்.
Read more – சித்ரா கணவர் ஹேம்நாத் சிறையில் அடைப்பு : திசை திரும்பும் தற்கொலை வழக்கு
இதுதொடர்பாக விஸ்ட்ரானின் நிர்வாக அதிகாரி டி.டி.பிரசாந்த் போலீசாருக்கு அளித்த புகாரின் பெயரில் 7,000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு,160 பேர் கைதாகியுள்ளனர்.மேலும் விஸ்ட்ரானின் அலுவலக சேதார மதிப்பு 437 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.




